கொல்கத்தா:

ப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


“மாநில முதல்வர்களுடனான காணொலிக் காட்சி வாயிலான ஆலோசனையின்போது ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு மேற்கு வங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகமிக முக்கியமானது என்றும் பிரதமர் தெரிவித்தார். நாம் கவனமாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.

இந்த நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக நிதி ஒதுக்குமாறு கோரியுள்ளோம். மத்திய அரசு ரூ. 10 லட்சம் கோடியை மாநிலங்களுக்காக அறிவிக்க வேண்டும்” என்றார்.