பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரி: பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்,60 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பில் 36 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

153 கோடியோ 92 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,911 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. குழித்துறை குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

எழுவர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றார்.