நாளை அமித்ஷா அளிக்கும் விருந்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பங்கேற்பு?

டில்லி:

க்சிட் போல் கணிப்பை, வெற்றியாக கொண்டாடி மகிழும் பாரதியஜனதா கட்சி, அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், சந்தோஷத்தில் துள்ளிகுதிக்கும் பாரதிய ஜனதா கட்சித்தலைவர்  தலைவர் அமித் ஷா  தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு நாள விருந்தளிக்கிறார்.

வாக்கு எண்ணிக்கையே மே 23ந்தேதிதான் நடைபெற உள்ள நிலையில்,  அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அளிக்க உள்ள விருந்து முக்கியத்துவம் பெறுகிறது .அமித்ஷாவின் அழைப்பை ஏற்று கூட்டணி கட்சிகளான  அ.தி.மு.க., அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் லோக் ஜனசக்தி உள்பட பல கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக  மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டமும் நடைபெற உள்ளது.

அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் மே 23 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.