புதுடெல்லி: வாக்குப்பதிவுக்கு பிந்தைய சூழலில் அமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஜனாதிபதிக்கு தங்களின் கூட்டணி குறித்த தகவலை தெரிவித்து, ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதம் எழுதலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குகள் எண்ணப்படும் 23ம் தேதி காலையில் இந்தக் கடிதம் அனுப்பப்படலாம் என்று நம்பப்படுகிறது. அந்தக் கடிதத்தில், ஜனாதிபதிக்கு தங்களின் கூட்டணி குறித்து தெரிவித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தாங்கள் பெரும்பான்மை பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் இந்தக் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

இதன்மூலம், எதிர் முகாமிற்கு பெரும்பான்மை தவறும் பட்சத்தில், இவர்களை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன்மூலம் இவர்களுக்கு முன்னுரிமையும் கிடைக்க வழியேற்படும் என்றும் கூறப்படுகிறது.