கோபி: பள்ளிகளில் 2021ம் ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வு எழுப்பிய செய்தியளார்களிடம், எப்போதும்போல, முதல்வருடன் கலந்தாலோசித்து தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கோபி  அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று  நடந்தது. அம்மா கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், கோயில்கள்  திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது. தமிழகஅரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக எடுத்ததன் பயனமாக தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் பதவி காலம் மே 24ம் தேதி முடிவடைவதால் அதற்கு முன்  கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுமா, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் தெரிவித்தவர்,  . கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்கு  காரணமாகவும் கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து தேர்ச்சி  அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு நிலைமை வேறு. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா?  என்பது குறித்து முதல் அமைச்சரிடம் கலந்து நல்ல முடிவு  அறிவிக்கப்படும் என்றார்.