பாஜகவின் நதிநீர் இணைப்பு சாத்தியப்படுமா? என்ன சொல்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்…

சென்னை:

பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிவித்து உள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்கள் தண்ணீருக்காக அண்டைய மாநிலங்களை சார்ந்து இருக்கும் சூழ்நிலை யில், பாஜகவின் அறிவிப்பு ஒரு வகையில் வரவேற்பை பெற்றிருந்தாலும், இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா?  இது சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா என பல கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியின்போது நதிநீர் இணைப்பு குறித்து பேசப்பட்டது. அதன்பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியோ, கடந்த 5ஆண்டு கால மோடி ஆட்சியோ நதி நீர் குறித்து வாய் திறக்காத நிலையில் தற்போது நடைபெற உள்ள தேர்தலை மனதில் கொண்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்து உள்ளது.

இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் ரஜினிகாந்த் வரவேற்பு அளித்துள்ள மேலும் பிரபலப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் இயற்கை ஆர்வலரான பூவுலகு நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழியல் செயற்பாட்டாளர், சுந்தரராஜன் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்…

நதி என்பது கடலில் கலக்கும்படியான சூழலைத்தான் இயற்கை ஏற்படுத்தியுள்ளது. அதை நமது இஷ்டத்துக்கு வடக்கவோ, தெற்கவோ இழுக்க முடியாது.  உலகில் உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால் நதி கடலில் கலந்துதான் ஆக வேண்டும்.  இயற்கையின் ஒவ்வொருஐ  செயலுக்கும் அர்த்தம் உண்டு. நதி கடலில் கலக்கின்றது என்றால் அதற்கும் காரணம் உண்டு… அந்த காரணம் மனிதர்களுக்கானதே.

தமிழக மக்கள் காவிரி பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால், நதிநீர் இணைப்புக்கு ஆதரவாக குரல்கொடுக்கிறார்கள்… நதிநீர் இணைப்பு குறித்து மற்ற எந்த மாநிலத்திலும் பேச மாட்டார்கள்… இந்த திட்டம் அரசியல் ரீதியாக தோல்வியடைந்த ஒரு திட்டம்.

இந்த நதிநீர் திட்டத்தை நாம் நீரியியல் பார்வையில் பார்த்தோமானால், நதிகளை இணைப்பது அவ்வளவு எளிதல்ல.  முதலில் நாட்டில் ஓடும்   16 தீபகற்ப நதிகளையும், 14 இமயமலை நதிகளையும் ஒன்றோடொன்று இணைக்க வேண்டும், பின்னர்  கங்கையும், காவிரியையும் ஓரிடத்தில் இணைக்க வேண்டும். இவைகள் சாத்தியப்பட்டால் மட்டுமே நதிநீர் இணைப்பு சாத்தியம்…

ஆனால், நநிநிர் இணைப்பு குறித்து  மத்திய நீர்வள  ஆணையமோ,  பிரம்ம புத்திராவைத் தவிர வேறு எங்கையும் உபரி நீர் இல்லை என்று கூறுகிறது. அதேவேளையில்,  கடல் மட்டத்திலிருந்து தக்காணப் பீடபூமி  கங்கை சமவெளிப் பகுதிகளைவிட அதிகமாக உயரத்தில் இருக்கின்றது. இதில் கங்கையை தக்காண பீடபூமிக்கு  பம்ப் செய்துதான் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதுவும் சாத்தியப்படுமா என்பது பல டாலர் மில்லியன்கள் கேள்வி… அதுபோல பொருளாதார பலத்தை எடுத்துக்கொண்டால், சுமார் 15லட்சம் கோடி ரூபாய் ஆகும் என மதிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, பின்னர்  நதியை பாதுகாக்க காவல் படைகள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்…

அதே வேளையில் நதிநீர் இணைக்க நடவடிக்கை எடுக்கும்போது, அந்த பகுதியில் வசித்து வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு மாற்று வசதி செய்து தரப்பட வேண்டும்… அதுமட்டுமின்றி வன விலங்குகள், இயற்றை சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்… இதையெல்லாம் கடந்தால்தான் நதிநீர் இணைப்பு என்பது சாத்தயப்பட வாய்ப்பு… இல்லையேல் இது கனவுதான்…

முன்னாள் அணுவிஞ்ஞானி அப்துல்கலாமின்  அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ் கூறும்போது,  சீனர்கள்  நதிநீர் இணைப்பை சாத்தியப்படுத்தி உள்ளனர்  என்று தெரிவித்து உள்ளார்.  அதுபோல இந்தியாவிலும் சாத்தியமே என்று கூறி உள்ளார்.  ஏற்கனவே நதிநீர் இணைப்பு குறித்து, கே. எல். ராகுல் திட்டம் வகுத்துகொடுத்துள்ளார். அதுபோல  கேப்டன் தஸ்துர் என்பவர் கான்பூர் கால்வாய் திட்டத்தைக் கொடுத்தார். இந்த இரு திட்டங்களுமே மேலிருந்து கீழாக நதிகளை இணைக்கக் கூடியவை. இவைகளை நடைமுறைப்படுத்தி நதிகளை இணைக்கலாம் என்று கூறி உள்ளார்.

தென்னிந்திய நதிகளை இணைக்கும்போது மலைகளையும் இணைக்கலாம். மலைகளிலுள்ள வடிநிலங்களையும்  இணைக்கலாம். இவ்வாறு இணைத்தால் 250 அடி உயரத்தில் ஒரு பெரும் நீர்வழிச்சாலையாக உருவாக்கப்படும். இவ்வாறு இருந்தால் எந்த சுற்றுச்சூழலும் பாதிக்காது. மலைகளில் பில்லர் மற்றும் சுரங்கங்கள் அமைத்து  நாம் தொடரலாம். இதன் காரணமாக  கிட்டத்தட்ட 3,000லிருந்து 4,000 டிஎம்சி தண்ணீர் தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்க ளுக்கும் சரிசமமாகக் கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

நதிகளை இணைத்து விவசாயம் சார்ந்த பொருளாதராத்தைக் கட்டமைத்தால் மட்டுமே 10% பொருளாதார வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்க முடியும்” என்று பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

நதிகளை இணைப்பது குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், பருவநிலை மாற்றத்தின்போது நதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். இமயமலை போன்ற மலைகளில் உள்ள பனி உருகி, வேகமாக வரும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும்..

நதிகள் இணைப்பு குறித்து பலர் பல்வேறு  சாதகமான மற்றும் பாதகமாக தகவல்களை கூறி வந்தாலும்,  இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டவர் 1858-ல் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் ஆர்தர் தாமஸ் காட்டன்.

அவரது வழிகாட்டுதலின்படிதான்  ஆந்திராவின் கோதாவரி-கிருஷ்ணா வடிநிலம், மத்தியப் பிரதேசத்தின் கென்-பேட்வா நதிகள் இணைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்து குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.