டெல்லி:

ந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, வரும் 11ந்தேதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த  லாக்டவுன் (ஊடரங்கு) வரும் 14ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், அதை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டுக்கள் இருந்து வந்த நிலையில், டெல்லி இமாம் தப்லிஜி மாநாட்டுக்கு பிறகு தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா  தாக்கம் விரிவடைந்து வருகிறது. இதனால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் மத்திய  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

பஞ்சாப், கோவா மாநில அரசுகள் ஊரடங்கை மாநிலத்தில் ஏப்ரல் 30ந்தேதி நீட்டிப்பதாக அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து, மத்திய அரசும்  சிந்தித்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோல ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் ஊரடங்கை மேலும் நீட்டித்தால் தான் கொரோனா பரவலை  தடுக்க முடியும் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்து வருகின்றன.  பல அரசியல் கட்சிகளும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வரும் 11-ம் தேதி மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பிறகு, ஊரடங்கு நாடு முழுவதும் நீட்டிக்கப்படுமா, அல்லது கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் மட்டும் நீட்டிக்கப்படுமா  என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன