டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் 54வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.  இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், முடிவு காணத நிலையில், உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து இருப்பது, வேளாண் சட்டங்கள் குழு ஆராய 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.  உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் , மன், பிரமோத் குமார் ஜோசி, அலோக் குலாட்டி, அனில் தன்பாத் ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் அமைத்த குழுவினரை ஏற்காத விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், போராடும் விவசாயிகள்   குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று டெல்லியில்  டிராக்டர் ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெறும் எனவும்  தெரிவித்துள்ளது. ஆனால், குடியரசுத் தினத்தன்று டெல்லியில், அரசு சார்பில் ராஜபாதையில் ராணுவ அணி வகுப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இநத நிலையில், விவசாயிகளின்  டிராக்டர் பேரணிக்கு எதிராக டெல்லி போலீசார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை நீக்க கோரும் மனு மீதான விசாரணையும் இன்றும் நடைபெற உள்ளது.  இதையடுத்து டிராக்டர் பேரணிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா என்பது தெரிய வரும்.