விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்களைக் குவித்துள்ளது.

பேட்டிங் பிட்சாகவும், சுழற்பந்துக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடியதாகவும் இருக்கும் விசாகப்பட்டணம் மைதானத்தில், தென்னாப்பிரிக்காவும் இந்தியாவிற்கு டஃப் கொடுத்துள்ளது.

அந்த அணியின் டீன் எல்கர் 160 ரன்களும், கேப்டன் டூப்ளசிஸ் 55 ரன்களும், குவின்டன் டீ காக் 111 ரன்களும் அடித்தனர். இதனால் மொத்தம் 118 ஓவர்கள் ஆடியுள்ள தென்னாப்பிரிக்க அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இன்னும் 2 நாட்கள் ஆட்டமே மீதமிருக்கும் நிலையில், இரு அணிகளுமே பேட்டிங்கில் டஃப் கொடுப்பதால், இந்த ஆட்டம் டிராவை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று கருதப்படுகிறது.