சென்னை:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதனால், வாகனப்போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், வாரத்திற்கு ஒருமுறையோ, 15 நாட்களுக்கு ஒருமுறையோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவர்களின் சிகிச்சை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுபோன்ற நோயாளிகளுக்கு அரசு ஆம்புலன்ஸ் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் தீவிர நோயாளிகள் சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள்

இதய நோய் சிறுநீரக கோளாறு புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

வாரம் ஒரு முறையோ அல்லது சில முறைகளோ வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்லவேண்டிய கட்டாயம்

அதற்கு வாகன வசதி கிடையாது

தனியார் வாடகை வாகனங்களை இதுவரை நம்பியிருந்தார்கள்

தற்போது  அதற்கான வாய்ப்பே இல்லை

தொலைபேசி மூலம் ஆம்புலன்ஸ் வண்டிக்கு தெரிவித்தால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விடுகிறார்கள்

ஆனால் அங்கிருந்து வீடு திரும்ப முடியாது

ஆம்புலன்ஸ் சேவையை இருவழி பயணம் ஆக்கி அரசு உத்தரவு பிறப்பித்தால் தினமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்

சுகாதாரத் துறை அமைச்சரின் எல்லா செயல்களும் மக்களால் பெரிதும் பாராட்டப் படுகின்றன

இல்லத்தில் இருந்தபடி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இரு வழிப் பயண ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

முக்கிய உயிர்காப்புக்கு உட்படுத்தும் வழக்கமான நோயாளிகளுக்கு சேவை செய்வதில் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் சரியான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.

தமிழக அரசு அதற்கான உத்தரவை உடனே பிறப்பிக்குமா?