சிலை கடத்தல் சிபிஐக்கு மாற்றப்படுமா? சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சென்னை:

சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி பொன்மாணிக்க வேல் இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கில்    சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய  தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.  வழக்கை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடுமா? அல்லது தமிழக அரசின் அரசாணையை எற்று  சிபிஐக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ரயில்வே ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து . சிலைக் கடத்தல் தொடர்பான புகார்களின் பேரில்ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. இதன் காரணமாக பழமையான பல சிலைகள் மீட்கப்பட்டதுடன்,  சிலை மாற்றப்பட்டது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொன்.மாணிக்க வேல் தலைமையிலான விசாரணையில்,  திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரியும், பொன் மாணிக்க வேலே விசாரிக்க வேண்டும் என்று  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம்,  சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது.

இந்த பரபரப்பா ன சூழ்நிலையில், ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார. இதன் காரணமாக சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பாக இன்று உயர்நீதி மன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுமா அல்லது ஐ.ஜி. பொன்மாணிக்க வேலையே தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடுமா? என்பது இன்று பிற்பகல் தெரிய வரும்.