குடியாத்தத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படுமா? சட்டமன்றத்தில் துரைமுருகன் கேள்வி

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை  தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சித்துணைத்தலைவரும்,  திமுக எம்எல்ஏவுமான துரைமுருகன்,  குடியாத்தத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,  இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்திய தேசியக்கொடியை நெய்து,  செங்கோட்டைக்கு அனுப்பியது குடியாத்தம் பகுதி நெசவாளர்கள்  என்று கூறியவர், அவர்கள் பயன்பெறும் வகையில் குடியாத்தத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு அரசு முன்வருமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், உறுப்பினர் கேள்வி குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.