மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்குமா? கட்ஜு கேள்வி

டில்லி:

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்லாம் என்று உத்தரவிடுமா என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பி  உள்ளார்.

கேரளாவில் உள்ள பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செய;ல என்று கூறி, கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம்  தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு பயங்கர எதிர்ப்பும் ஒருசாரார் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.  மத நம்பிக்கைகளில் உச்சநீதி மன்றம் தலையிட உரிமை இல்லை என்றும்… உரிமை உண்டு என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு பெரும்பான்மையா இந்துக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மசூதிகளில் பெண்களை அனுமதிக்க கோர்ட் உத்தரவிடுமா என்று கேள்வி எழுப்பி உள்ளளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கட்ஜூ, இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என, தீர்ப்பு வழங்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 1 அல்லது 2 சதவிகித இஸ்லாமிய பெண்கள்  மட்டுமே மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் வீடுகளிலேயே பிரார்த்திக்கிறார்கள்… இது நடைமுறையில் உள்ளது… அது கோட்பாடு கிடையாது… 

இவ்வாறு கட்ஜு பதிவிட்டுள்ளார்.