பூடானைப் பார்த்து கற்றுக்கொள்வார்களா இங்குள்ள சிலர்?

திம்பு: மன்னராட்சி யுகத்திலிருந்து ஜனநாயக உலகத்தில் பிரவேசித்த பூடான், தற்போது சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

அந்நாட்டில், இலவச‍ தொடக்கநிலை மருத்துவ சேவைகள், அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை சுற்றுச்சூழல் கெடாமல் வழங்கப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய மாற்றங்கள் நடந்துவரும் அந்நாட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அங்கே மதமும் அரசியலும் தனித்தனியாகப் பிரிந்திருப்பதுதான். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திலேயே அது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மதம் சார்ந்த தலைவர்களும் குருக்களும், சமூகத்தின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபட வேண்டுமேயொழிய, அவர்கள் எந்தவகையிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது அங்குள்ள சட்டம்.

சமயம் சார்ந்த நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதோ, இதர வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதோ கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்தாவது, இந்தியாவின் சில அரசியல் கட்சிகள் கற்றுக்கொள்ளுமா? என்கின்றனர் சமூகப் பார்வையாளர்கள்.

– மதுரை மாயாண்டி