சிறையில் இருந்து வெளியே வருவாரா வேல்முருகன்?

சென்னை:

மிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு இரண்டு வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில்,  பழைய வழக்குகளில் அவரை கைது செய்ய காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கு மற்றும், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது.

இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவிலில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், வேல்முருகனை சிறையில் இருந்து விடுவிக்காமல், பழைய வழக்குகளில் கைது செய்ய காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே இலங்கை தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தின்போது அவர்மீது போடப்பட்ட வழக்கு, காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, நீட் பிரச்சினை, மோடிக்கு எதிராக கருப்புகொடி காட்டியது, ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் போன்ற பல மக்கள் நல போராட்டங்களில் அவர் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளை தூசி தட்டி தமிழக காவல்துறை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதி மன்றம் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின் கொடுத்தும், அவரை தொடர்ந்து ஜெயி லிலேயே அடைத்து வைக்கும் முயற்சியில் தமிழக அரசு, காவல்துறை மூலம் பழைய வழக்குகளில் கைது செய்து, தொடர்ந்து சிறையிலேயே வைதித்திருக்க காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருவதாக  கோட்டை வட்டார  ரகசிய  தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேல்முருகனை தொடர்ந்து ஜெயலிலியே அடைத்து வைக்க நினைக்கும் தமிழக அரசின் முயற்சி, தமிழக வாழ்வுரிமை  கட்சி தொண்டர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.