விஜய் அரசியலுக்கு வருவாரா?: தந்தை எஸ்.ஏ.சி. பதில்

விழாவில் எஸ்.ஏ.சி.

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கு அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள, உலக தமிழ் பல்கலை சார்பில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான, எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, சென்னையில், நேற்று கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. புரட்சிகரமான கருத்துக்கள் உடைய, திரைப்படங்களை இயக்கியதற்காக, இந்த பட்டம் அளிக்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்டு எஸ்.ஏ.சந்திர சேகர் பேசியதாவது:

“தமிழ் பல்கலையின் டாக்டர் பட்டம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஏற்கெனவே இரு முறை டாக்டர்  அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தான் உலக அளவில், ஒரு தமிழரை சிறப்பு செய்துள்ளது.

என் மகன் விஜய், அரசியலுக்கு வருவது பற்றி, அவர் தான் தெரிவிக்க வேண்டும்.  இப்போதைக்கு, மக்களுக்கான பல்வேறு சேவையை அளித்துவரும் அவரது  மக்கள் இயக்கத்தை வழிநடத்தி வருகிறேன்.

என் ஓய்வுக்கு முன், ஒரு சாதனை செய்ய வேண்டும்; அதை முடித்து விட்டு தான் போவேன்” என்று எஸ்.ஏ.சி. தெரிவித்தார்.