பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் வேகத்தை காட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?

நாட்டிங்ஹாம்: 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நிலையில், மே 31ம் தேதி நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் நாட்டிங்ஹாமில் மோதுகின்றன.

இதுவரையான உலகக்கோப்பை ஆட்டங்களில் இரு அணிகளும் 10 முறை மோதியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 3 முறை மட்டுமே வென்றுள்ளது.

நியூசிலாந்துடன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், 421 ரன்களை குவித்து பலரையும் பயமுறுத்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்தப் போட்டியில் வெல்லவும் செய்தது.

அந்த அணியின் ஆல்-ரவுண்டர் கார்லோஸ் ப்ராத்வெய்ட், தமது அணியால் 500 ரன்களைக்கூட கடக்க முடியும் என்று சவால் விட்டுள்ளார்.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக, வலுவான இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் தொடரை 2 – 2 என்பதாக சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ், முத்தரப்பு தொடரில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்த அதிர்ச்சியும் நடந்தது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-