சென்னை: இந்தியாவின் 288 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 31 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 168 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.

அந்த அணியின் ஹெட்மேர் 97 ரன்கள் எடுத்து சதத்தை விரைவாக நெருங்கி வருகிறார். அவர் 81 பந்துகளில் 97 ரன்களை அடித்துள்ளார்.

துவக்க வீரரான ஹோப், நிதானமாக ஆடிவருகிறார். அவர் 98 பந்துகளை சந்தித்து 54 ரன்களில் களத்தில் உள்ளார். மற்றொரு துவக்க வீரர் ஆம்ப்ரிஸ் மட்டுமே 9 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

தற்போதைய நிலையில், கையில் 9 விக்கெட்டுகள் இருக்க, 114 பந்துகளில் 119 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருப்பதால், போட்டி இதேநிலையில் சென்றால் வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.