வாஷிங்டன்

ந்தியா மற்றும் அமெரிக்கா உடனான அணு ஒப்பந்தத்தை நடத்திய வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.  இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.   இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா சார்பில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் நடத்தினார்.

இந்த ஒப்பந்தத்தில் அணு உலை விபத்தை சந்தித்தால் தரவேண்டிய நஷ்ட ஈடு குறித்து எவ்வித கருத்தும் ஏற்படாமல் இருந்தது.   இதையொட்டி பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதன் மூலம் இந்திய அணு உலைகளுக்கு எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து எரிபொருள் கிடைக்கும் என அப்போது கூறப்பட்டது.  இந்த ஒப்பந்தம் அப்போதிருந்தே கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த ஒப்பந்தத்துக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   ஆயினும் இந்த அணு எரிபொருள் மின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் அணுகுண்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தெரிவித்தன.  அதன் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மோடி ஆகியோரும் இந்த ஒப்பந்தத்துக்கும் அதற்கு பின்னணியில் இருந்த வில்லியம் பர்ன்ஸ் க்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்ததை ஒட்டி ஜோ பைடன் அதிபராக  பதவி ஏற்க உள்ளார்.   இந்நிலையில் சிஐஏ என்னும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு இயக்குநராக வில்லியன் பர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜோ பைடன் இவ்வாறு நியமனம் செய்தது இந்திய அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கனவே எதிர்ப்பு உள்ள நிலையில் வில்லியம் பர்ன்ஸ் சிஐஏ இயக்குநராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.