லண்டன் :

பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த வாரம் இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை முகமை (எம்.எச்.ஆர்.ஏ / MHRA), மற்றும் தேசிய சுகாதார சேவை (என்.ஹெச்.எஸ். / NHS) ஆகியவற்றின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து.

உலகின் முதல் நாடாக பிரிட்டனில், அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது, தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட வில்லை என்றாலும், அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை பிரிட்டன் தொடங்கியது.

90 வயதான மார்கரெட் கீனன் என்ற பெண்மணி உலகின் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணாக அறிவிக்கப்பட்டார், இவரைத் தொடர்ந்து 81 வயதான வில்லியம் ஷேஸ்பியர் என்ற நபருக்கு இரண்டாவதாக தடுப்பூசி போடப்பட்டது.

வார்விக்க்ஷயரை சேர்ந்த ஷேஸ்பியருக்கு, பல்கலைக்கழக மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழக வளாகம் ஸ்டாப்போர்ட் இவோன் பகுதியில் அமைந்திருந்தது.

உலகின் பிரபல நாடாக காதாசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேஸ்பியர் பிறந்த ஸ்டாப்போர்ட் இவோன் பகுதியில், அதே பெயரை கொண்ட ஒரு நபருக்கு உலகின் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது மிகவும் சுவாரசிய சம்பவமாக இருந்தது.