ராகுல்காந்தி போட்டியிட சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் தொகுதிகளில் விருப்ப மனுக்கள்

சென்னை:

ராகுல்காந்தி போட்டியிட வலியுறுத்தி சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.


இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் தனித் தொகுதியில் போட்டியிட 62 பேர், கிருஷ்ணகிரியில் போட்டியிட 15 பேர், ஆரணியில் போட்டியிட 36 பேர், கரூரில் போட்டியிட 17 பேர்,திருச்சியில் போட்டியிட 25 பேர் சிவகங்கையில் போட்டியிட 10 பேர், தேனியில் போட்டியிட 18 பேர், விருதுநகரில் போட்டியிட 12 பேர், கன்னியாகுமரியில் போட்டியிட 54 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தம் 249 விருப்பமனுக்கள் வந்துள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வலியுறுத்தி சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.