விம்பிள்டன் 2018-: நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால், 12-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் வென்றார். 2-வது செட்டில் ஆவேசமாக விளையாடி நடால் 6-3 என்ற கணக்கில் கப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் சம நிலையில் இருபந்ததால் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(11) – 6(9) என ஜோகோவிச் கைப்பற்றினார். 4-வது செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார்.

இதனால் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என இருவரும் களம் இறங்கினார்கள். இறுதியில் ஜோகோவிச் கையே ஓங்கியது அவர் 10-8 என 5வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

6-4, 3-6, 7(11)-6(9), 3-6, 10-8 என நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்த்து விளையாடுகிறார்.