விம்பிள்டன்: இறுதிப்போட்டியில் பெடரர் – மரின் மோதல்

--

ண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெடரர் – குரோஷியாவின் மரின் சிலிக் மோதுகின்றனர்.லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலக அளவில் 5ம் இடத்தில் உள்ள ‘ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 15வது இடத்தில் உள்ள செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் மோதினர்.

இரண்டு மணி நேரம், 18 நிமிடம் வரை நீடித்த இந்த போட்டியில் பெடரர் 7-6, 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து 11வது முறையாக விம்பிள்டனில் பைனலுக்கு அவர் முன்னேறினார்

ஆகவே இறுதிப்போட்டியில் பெடரர், மரின் சிலிக் மோதுகின்றனர்.