Random image

விம்பிள்டன்: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய செரீனா, ஜூலியா

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்குக்கான காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனையை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி சுற்றில் செரீனா வில்லியம்ஸ் இத்தாலியை சேர்ந்த காமிலா ஜியார்ஜியை எதிர்கொண்டார். இதில் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் காமிலாவை வீழ்த்தில் செரீனா முன்னேறினார்.
GRAND-SLAM
தரவரிசை பட்டியலில் 25வது இடத்தில் உள்ள காமிலா ஜியார்ஜி ஏழு முறை சாம்பியனான செரீனாவுடன் மோதினார். முதல் செட்டை 3-6 என்ற புள்ளிகளில் கைப்பற்றிய ஜியார்ஜி, செரீனாவை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிதார். இது செரீனாவுக்கு நெருக்கடியை கொடுத்தது. 2வது செட்டில் 6-3 என்ற புள்ளிகளில் செரீனா, ஜியார்ஜியை வீழ்த்தினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதில் 6-4 என்ற புள்ளிகளை கைப்பற்றிய செரீனா தனக்கு நெருக்கடி அளித்த ஜியார்ஜியை வென்று அசத்தினார்.

”நான் நான்காவது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்கிறேன். அதனால் எனக்கு பயமில்லை. அதிகமான அழுத்தத்தையும் நான் உணரவில்லை. இந்த போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். நான் மீண்டும் திரும்பி வந்துள்ளேன் என்பதை நிரூபிக்கவே முயன்றேன். நான் தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இன்னும் இதுபோன்ற பல போட்டிகளில் பங்கேற்க நான் விரும்புகிறேன்” என்று செரீனா கூறினார்.

இதனை தொடர்ந்து தரவரிசைப்பட்டியலில் 13வது இடத்தில் உள்ள ஜூலியா ஜார்ஜஸ் 20வது இடத்தில் உள்ள கிகிபெர்டென்சை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டில் 3-6 என்ற புள்ளிகளில் ஜூலியா தோற்றார். அடுத்த செட்டில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு 7-5 என்ற நிலையில் கைப்பற்றினார். 3வது செட்டில் எளிதாக 6-1 என்ற புள்ளிகளில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
juliya
இந்த வெற்றியை தொடர்ந்து அரையிறுதி போட்டியில் ஜூலியா ஜார்ஜஸ் செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்ள இருக்கிறார். காலிறுதி சுற்றில் வெற்றிப்பெற்றது குறித்து ஜூலியா கூறுகையில் “ அனைத்து போட்டிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. அனைவரும் போட்டியில் வெற்றிப்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நான் தொடர்ந்து முன்னேற முயற்சிக்கிறேன் என்று கூறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவிர்கான காலிறுதி சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெல் போட்ரோ பிரான்ஸை சேர்ந்த ஜில்லஸ் சைமனுடன் திங்கட்கிழமை மோத இருந்தார். அடந்த இருட்டு காரணமாக இந்த போட்டி நிறுத்தப்பட்டது. கடந்த நான்கு போட்டிகளில் வெற்றிப்பெற்று வந்த டெல் பொட்ரோ நான்காவது செட்டில் 5-4 என்ற புள்ளிகளை பிரான்ஸ் வீரரை தோற்கடித்து வெற்றிப்பெற்றார். இந்த வெற்றியை அடைய அவருக்கு 4 மணி 24நிமிடங்கள் தேவைப்பட்டன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நீண்ட நேரம் எடுத்த கொண்ட போட்டியாக இது உள்ளது.

புதன்கிழமை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் டெல் பொட்ரோ உடன் நஃபேல் நடால் மோத உள்ளார்.