விம்பிள்டன்: இந்தியாவை சேர்ந்த ஷரன் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இந்தியாவை சேர்ந்த ஷரன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதே வேளையில் ஜீவன் ஜோடி முதல் சுற்றில் தோல்வியை சந்தித்தது.
DIVIJSHARAN
வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த தீவிஜ் ஷரன் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த ஆர்தம் சீதக் ஜோடி, ராடு ஆல்போட் மற்றும் மாலெக் ஜசிரி ஜோடியுடன் மோதியது. இரண்டாவது சுற்றில் 2 மணி நேரம் 41 நிமிடங்களுக்கு தொடர்ந்து விளையாடிய ஷரன் மற்றும் சீதக் ஜோடி 7-6(4), 6-7(8), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எதிரணியை வீழ்த்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் ஒரு இடத்தில் மட்டும் தடுமாறிய ஷரன் – சீதக் ஜோடி தங்களை எதிர்த்து போட்டியிட்டவர்களை மூன்று முறை தோற்கடித்தனர்.

இதே போன்று மற்றொரு சுற்றில் இந்தியாவை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்டின் உடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவிற்கான முதல் சுற்றில் விளையாடினார். ஜீவன் மற்றும் ஆஸ்டின் ஜோடி டச்சு நாட்டை சேர்ந்த சந்தர் ஆரென்ஸ் மற்றும் மத்வே மிடில்கூப் இணையுடன் மோதியது. இதில் ஜீவன் ஜோடி தன்னை எதிர்கொண்ட டச்சு ஜோடியிடம் 6-7, 6-7, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தது.