விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: முகுருசா அதிர்ச்சி தோல்வி – ஹாலேப் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினை சேர்ந்த முகுருசா வெளியேற்றப்பட்டார், அதே வேளையில் ரோமனை சேர்ந்த சீமோனா ஹாலேப் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுற்கு முன்னேறியுள்ளார். விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியின் இரண்டாவது சுற்றில் சாம்பியனான கார்பின் முகுருசா, பெல்ஜியத்தை சேர்ந்த அலிசன் வான் உத்வான்ஸ் உடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டார். போட்டியில் முடிவில் 5-7,6-2,6-1 என்ற செட் கணக்கில் முகுருசாவை, அலிசன் வெற்றிக் கொண்டார்.
muruguza
இதனை தொடர்ந்து விம்பிள்டன் தொடரில் இருந்து முகுருசா வெளியேற்றப்பட்டார். இந்த தோல்வி முகுருசா ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மிகுந்த மனவேதனை அளித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு பங்கேற்ற முகுருசா 7-5, 6-0 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தினார்.
simona
இதே போல் வியாழக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் ரோமனை சேர்ந்த சீமோனா ஹாலேப் முதல் செட்டை வீழ்த்தினார். சீனாவை சேர்ந்த ஷெங் சைசை உடன் ஒற்றையர் பிரிவில் மோதிய ஹாலேப் 7-5, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து ஹாலேப் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.