விம்பிள்டன் டென்னிஸ் தொடக்கம்: இன்று ஃபெடரர் – லாஜோவிச் இடையே மோதல்

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று மாலை தொடங்குகிறது. இன்று நடைபெற உள்ள முதல் சுற்று ஆட்டத்தில்,  பிரபல வீரர்களான  சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர்  பெடரருக்கும், செர்பியாவை சேர்ந்த டுசன் லாஜோவிச்-க்கும்  இடையே இன்று போட்டி நடைபெறுகிறது.

டென்னிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்  விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் 15-ம் தேதி வரை 15 நாட்கள் பல்வேறு நாட்டின் வீரர்களுக்கு இடையே  நடக்கிறது.

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் ரஃபெல் நடால், முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், குரோஷியா வின் மரின் சிலிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ, ஆஸ்திரியாவின் டொமினிக் திம்  போன்ற முன்னணி வீரர்கள் மோத உள்ளனர்.

(பைல் படம்)

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டங்களில் கோப்பையை கைப்பற்ற வீரர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் சுற்றில், ஃபெடரர் மற்றும் லாஜோவிச் இடையே போட்டி நடைபெற உள்ளது.   இந்த போட்டிகளில் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில்  இத்தாலியின் தாமஸ் பாபியானோவை,  தற்போது தர வரிசை யில்  85-வது  இடத்தில் உள்ள  யுகி பாம்ப்ரி எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அண்மையில் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு சாம்பியன் முகுருஜா (ஸ்பெயின்), வோஸ்னியாக்கி (ஆஸ்திரேலியா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மரிய ஷரபோவா (ரஷியா) உள்ளிட்டோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள்.

இந்த வீராங்கனைகளுடன் கடந்த ஆண்டு குழந்தை பெற்ற அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்சும் களத்தில் குதித்து உள்ளார். இவர் ஏற்னவே 7 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். இவர் முதல் சுற்றில் நெதர்லாந்தின் அரன்ட்சா ரஸ்சை எதிர்கொள்கிரார்.

அதுபோல ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி உள்பட ஆறு இந்தி வீரர்கள் களத்தில்உள்ளனர்.

இந்த போட்டிகளுக்கான  மொத்த பரிசுத்தொகை ரூ.307 கோடி  இதில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.20¼ கோடியுடன் 2000 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும்.

2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும்.

இந்த போட்டிகள்  இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.   இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு  சேனல் நேரடியாக  ஒளிபரப்பு செய்கிறது.