Random image

வங்கக்கடலில் காற்றழுத்த மண்டலம்: துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை:

ங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் வேகமான காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும்  கடற்கரையோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து,  மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில், சென்னை, காட்டுபள்ளி, எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை  தீவிரமடைந்துள்ள காரணத்தால் மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.  கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் 4 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.