விண்டீஸ் 115 ரன்களுக்கு 2 விக்கெட் – டிராவை நோக்கி இரண்டாவது டெஸ்ட்?

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில், 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்துள்ளது விண்டீஸ் அணி.

இந்தப் போட்டி, மூன்றாவது நாளில் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து, அதன்பிறகு, களமிறங்கிய விண்டீஸ் அணி, 32 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

விண்டீசின் பிராத் வெயிட் 39 ரன்களுடன் களத்தில் உள்ளார். ‍ஜோசப் 32 ரன்களை அடித்தார். ஷாய் ஹோப் 24 ரன்களுடன் ஆடி வருகிறார். நான்காவது நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில், முதல் இன்னிங்ஸே இன்னும் முடியவில்லை என்பதால், ஆட்டம் டிராவில் முடிவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம்.

இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன் மற்றும் டாம் பெஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.