2வது டி20: புதிய ஆடுகளத்தில் விளையாடும் இந்திய அணி 10 ஓவர்களில் 100 ரன்கள் சேர்ப்பு

விண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2nd

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்தது. அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 5விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. அதன்பிறகு, இன்று 2வது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இன்றைய போட்டி நடக்கும் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் மைதானம் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தும் 52வது மைதானம் என்ற பெருமையைப் பெறுகிறது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் இந்த மைதானத்தில் விளையாடும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும்.

தொடக்க ஆட்ட வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 100 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் பங்குபெறும் இந்திய அணியில் உமேஷ் யாதவுக்குப் பதில் புவேனஷ்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.