சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 114 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்துள்ளது.
விண்டீஸ் தரப்பில் துவக்க வீரர் பிராத்வெயிட் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். ஷேன் டவ்ரிக் 61 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 47 ரன்களும், ப்ரூக்ஸ் 39 ரன்களும் அடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், டாம் பெஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சேர்க்கும் ரன்களைப் பொறுத்தே, இந்த ஆட்டம் வெற்றி-தோல்வியில் முடியுமா? அல்லது டிராவில் முடியுமா? என்பது முடிவாகும்.