137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விண்டீஸ் அணி திணறல்!

--

லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது விண்டீஸ் அணி.

தற்போதைய நிலையில் 2 நாள் ஆட்டம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், விண்டீஸ் அணியின் கைவசம் 4 விக்கெட்டுகளே உள்ள நிலையில், 232 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தற்போதுவரை, கேம்ப்பெல் எடுத்த 32 ரன்கள்தான் விண்டீஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர். பிளாக்வுட் 26 ரன்களை அடித்தார். கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 24 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இப்போட்டியின் தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து அணியின் கையே பெரியளவில் ஓங்கியுள்ளது. விண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலவீனம் மீண்டுமொருமுறை வெளிப்படத் தொடங்கியுள்ளது.