விண்டோஸ் 95 க்கு இன்று பிறந்த நாள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகஸ்ட் 24, 1995 ஆம் வருடம் விண்டோஸ் 95 சிஸ்டத்தை பொதுமக்கள் உபயோகத்துக்கு அளித்தது.   இன்று பிறந்த நாள் காணும் விண்டோஸ் 95 க்கு 22 வயதாகி விட்டது.   மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எம் எஸ் டாஸ் என்னும் சகாப்தம் முடிந்து விண்டோஸ் சகாப்தம் இதே தேதியில் தொடங்கியது.

அறிமுக நாளன்று இந்த மென்பொருளை வாங்க மைக்ரோசாஃப்ட் விற்பனையகம் முன்பு மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.  அன்று தொடங்கிய வரவேற்பு விண்டோஸின் பல எடிஷன்களுக்கு இன்றும் தொடர்கிறது.

விண்டோஸ் 95 பொது மக்களிடையே கம்ப்யூட்டர் உபயோகத்தை பரவலாக்கியது.   அதற்கு முன்பிருந்ததை விட குறைந்த செலவில் கம்ப்யூட்டர்கள் கிடைக்க ஆரம்பித்ததும் விண்டோஸ் அறிமுகத்துக்கு பின் தான்.   அறிமுகப்படுத்தி ஓராண்டுகளுக்குள் விண்டோஸ் 95 விற்பனை 4 கோடியை அடைந்தது.

இணைய பயன்பாடு அதிகரித்தது விண்டோஸ் 95 அறிமுகத்துக்குப் பின் தான்.  இதை வெளியிட்ட மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. மூலதனம் 61300 கோடி டாலரை எட்டியது.  அன்று தொடங்கிய முன்னேற்றம் இன்றும் தொடர்ந்து வருகிறது.