கணினி உலகில் மறக்க முடியாத ஆகஸ்ட் 24 : விண்டோஸ் 95 அறிமுகம்

சிகாகோ

ன்று உலகப்புகழ் பெற்ற கணினியின் செயல் பொருளான விண்டோஸ் 95 வெளியிடப்பட்ட  தினம் ஆகும்.

உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலில் எம் எஸ் டாஸ் என்னும் செயல் பொருளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் கணினிகள் இயக்கப்பட்டு வந்தன.  அதன் பிறகு அவற்றை மேம்படுத்தி விண்டோஸ் 95 என அழைக்கப்படும் செயல் பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இதற்கு முன் உள்ள அனைத்து டாஸ் பதிப்புகளயும் கூட்டிணைத்து உருவாக்கப்பட்ட விண்டொஸ் 95 பெயருக்கேற்றார் போல் 1995 ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது.   இன்றைய தினத்துடன் (ஆகஸ்ட் 24) விண்டோஸ் செயல் பொருளுக்கு 23 வயதாகிறது.   அப்போது கணினியில் அதிகம் சிடி உபயோகம் இல்லாததால் ஃபிளாப்பி டிஸ்க் மூலம் இந்த செயலி நிறுவப்பட்டது.

இந்த விண்டோஸ் 95ஐ தொடர்ந்து விண்டொந்ந்ச் 98 இரு பதிப்புகள், விண்டோஸ் 2000 விண்டோஸ் XP,  உள்ளிட்ட பல தொகுப்புகள் வெளியாகின.   தற்போது அனைத்துக் கணினிகளிலும் விண்டோஸ் செயல்பொருள் மட்டுமே உபயோகப்படுத்தப் படுகின்றன.  அதனால் விண்டோஸ் அறிமுகப்படுத்தப் பட்ட ஆகஸ்ட் 24ஆம் தேதியை கணினி உலகம் என்றும் மறக்க முடியாது.