டெல்லி:
ந்திய நாட்டின் 130 கோடி மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும், நாட்டின் மிகப்பெரிய துறையான உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் சரக்கு (மது)  பாட்டில்கள் பதிவிடப்பட்டிருந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதைக்கண்ட நெட்டிசன்கள், மோடி அரசு தள்ளாடுகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில்  சரக்கு பாட்டிலுடன் பதிவிடப்பட்டு இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.
பிரதமருக்கு அடுத்த நிலையில் அதிக முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் வாய்ந்த துறை உள்துறை. இந்த துறையின் அமைச்சராக பிரதமர் மோடியின் நண்பர் அமித்ஷா இருந்து வருகிறார். அவரது தலைமையில் உள்ள துறையின் முகநூல் பக்கத்தில், மது பாட்டில்கள் நொறுக்குத் தீணியுடனான படத்துடன்  பதிவிடப்பட்டு உள்ள செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அம்பான்  புயலின் நிவாரணம் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்களில் இதுபோன்று மதுபானங்கள் உடன் கவலை என்று இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
இந்த பதிவு குறித்து விமர்சனம் எழுந்த நிலையில்,  ஏராளமானோர், உள்துறை அமைச்சகத்தின் செயல் குறித்து கடுமையாக ஆதகங்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து,  உள்துறை அமைச்சகத்தின் பேஸ்புக் பகுதியில்  இருந்த அந்த பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளன.
ஆனால், இந்த சர்ச்சைக்குரிய பதிவை, பதிவிட்டது யார் என்பதை, மத்திய உள்துறை இதுவரை மக்களுக்கு  தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
இந்த பதிவு குறித்து விமர்சித்துள்ள நெட்டிசன் ஒருவர், மோடி அரசு தள்ளாடிக்கொண்டிருப்பதை,  அவரது துறையின் அதிகாரிகளே  மது பாட்டிலுன் நாசூக்காக பதிவிட்டு உள்ளார்கள் போலும் என்று கலாய்த்துள்ளார்.