நான்கு வார மருத்துவ விடுப்பில் செல்லும் அபிநந்தன்

டில்லி

விங் கமாண்டர் அபிநந்தனிடம் நடந்த விசாரணை முடிவடைந்து அவர் நான்கு வாரம் மருத்துவ விடுப்பில் செல்ல உள்ளார்.

புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் ஈ முகமது இயக்க முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது.   இதனால் ஆத்திரம் அடைந்த பாக் விமானப்படை எல்லை தாண்டி வந்து இந்திய பகுதியை தாக்கியது.   இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் விமானப்படையை விரட்டி அடித்தார்.

அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை சிறை பிடித்தனர்.   உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான அரசு அபிநந்தனை விடுதலை செய்தது.   அவருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்திய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அத்துடன் அவரிடம் இந்திய விமானப்படை அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.   தற்போது அவருடன் நடந்த விசாரணை முடிவடைந்துள்ளது.   அத்துடன் அவருக்கு 4 வாரம் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.   அதன் பிறகு அவர் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.