கொரோனா: அடுத்துவரும் புதிய உலகில் வென்றவர்களும் தோற்றவர்களும்

கொரோனாவையொட்டிய, ஐரோப்பாவின் தற்போதைய நிலையைக் காணும்போது, இத்தாலியர்கள் நமக்கு புதிய பாடத்தையும், அதையொட்டி சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் அளித்துள்ளனர். ஆனால், உண்மையாகக் கூறுவதானால், இந்த நெருக்கடிக்கு பின் அனைத்தும் சரியாகுமா? சரியாக இருக்குமா? கொரோனா உண்டாக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான  தாக்கங்களைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால், “கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிரான போர்” என்று இம்மானுவேல் மக்ரோனின் வர்ணனையின் மத்தியில் இருக்கிறோம்.  இதற்கு பல்வேறு எதிர்வினைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தற்போது நாம் கூறும் அல்லது முயலும் எதுவும், முதல் மூன்று காட்சிகளுக்குப் பிறகு ஒரு நாடகத்தினை விமர்சனம் செய்வதற்கு ஒப்பாகும். ஆயினும்கூட, நம் உலகத் தலைவர்கள், சிறந்த இராஜதந்திரிகள் மற்றும் புவிசார் அரசியல் செய்வதில் வல்லுனர்கள். இவர்கள் ஒரு வரலாற்றை உருவாக்கும் காலத்தில் வாழ்வதை அறிந்துள்ளனர். எனவே, கொரோனாவிற்கு எதிரான போரில் ஒரு கண்ணும், இந்த நெருக்கடி உலகிற்கு என்ன விளைவிக்கும் என்பதையும் ஏற்கனவே உணர்ந்துள்ளனர். ஆகவே, இவர்களின் போட்டி மனப்பான்மை, அதிகாரம் ஆகியவற்றினால், சமூக ஒற்றுமை, அது சார்ந்த அமைப்புகள் ஒரு அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளன.

உலக நாடுகள் கொரோனா பரவலில் இருந்து ஏற்கனவே பாடம் கற்றுக்கொண்டுள்ளன. பிரான்ஸ் பிரதமர் மக்ரோன், “தற்போதைய நெருக்கடி எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. பல உறுதிகளும் நம்பிக்கைகளும் முழுமையாக துடைக்கப்பட்டுவிட்டன. நடக்க சாத்தியமற்றது என்று நாங்கள் நினைத்த பல விஷயங்கள் நம்முன்னேயே நடைபெறுகிறன. அதேப்போல, நாம் இதில் வெற்றி பெற்றாலும், வென்ற மறுநாளே, நாம் முந்தைய இயல்பு நிலைக்கு திரும்பிவிடப் போவது இல்லை. எனவே, பழக்க வழக்கங்கள், ஒழுக்க ரீதியாக நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். எனவே, எதிர்வரும் விளைவுகள் அனைத்தையும் நாம் எதிர்கொள்வோம்” என்று கூறினார்.

ஜெர்மனியில், முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு மந்திரி சிக்மார் கேப்ரியல் “நாங்கள் 30 ஆண்டுகளாக இந்த அரசைப் பற்றி பேசினோம்” என்று புலம்பியுள்ளார். மேலும் கூறும்போது, அடுத்த தலைமுறை உலகமயமாக்கல் பற்றி குறைவான அறிவையே கொண்டிருக்கும், என்று கணித்தார். இத்தாலியில், முன்னாள் பிரதமர் மேட்டியோ ரென்சி “இந்த நெருக்கடி மற்றும் தாக்கத்தை சமாளிக்கும் வகையில், எதிர்காலத்தில் ஒரு ஆணையத்தை உருவாக்க கோரியுள்ளார். ஹாங்காங்கில், கிராஃபிட்டி பின்வருமாறு கூறுகிறது ” இனி நம்மால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது. ஏனென்றால், இயல்பு நிலை என்பதே முதலில் பிரச்சினையாக உள்ளது”. “கொரோனா வைரஸுக்குப் பிந்தைய உலகை எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்” என்று ரிச்சர்ட் நிக்சனின் கீழ் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் கூறினார். ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியதாவது: “உலகின் மிகப்பெரிய சக்திகளுக்கு இடையிலான உறவு ஒருபோதும் செயல்படாமல் இருந்தது இல்லை. இதை கோவிட் -19 வியத்தகு முறையில் நமக்கு காட்டியுள்ளது. எனவே நாம் இன்றிணைந்து இருப்பது அவசியம். அல்லது, நாம் வீழ்த்தப்படுவோம்,” என்றார். உலகளாவிய சிந்தனையாளர்களில் கலந்துரையாடல் ஒன்றில், தற்போது பிரச்னை ஒத்துழைப்பு பற்றி அல்ல. ஆனால் கொரோனாவிற்கு பின்னரான உலகில் சீனா அல்லது அமெரிக்கா உலகின் மிகப்பெரிய சக்தியாக வெளிப்படுவார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

தற்போது இங்கிலாந்தில், ஒரு பாதுகாப்பற்ற விவாதம் நடைபெற்று வருகிறது.  வெளிச்செல்லும் தொழிற்கட்சித் தலைமை, தற்போதைய அரசின் மீட்பு நடவடிக்கைகளின் பலன்களை கண்டறிய முற்பட்டுள்ளது. ஒரு உண்மையான மீட்பு நடவடிக்கைகள் என்பது லாரி ஓட்டுனர் மற்றும் தெரு முடிவியில் கடை வைத்திருப்பவர்கள் வரை சென்றடைய வேண்டும் என்று கூறியது.

அதே போக்கில், போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் பிரிட்டனில் கொரோனாவின் தாக்கம், அரசியலை விட சமூகத்தின் மீது அதிகமாகியுள்ளது. இனி இங்கிலாந்து களத்தில் தனித்து இருக்க போவதில்லை. வகுப்புவாத முயற்சியினை உணந்திருத்தல், தன்னார்வமான சுகாதார ஊழியர்கள், இங்கிலாந்தை சேராத மற்றவர்களின் ஊக்கம் அனைத்தும் ஒன்றிணைந்து, இழந்திருந்த சமூக ஒற்றுமையை மீட்டெடுத்துள்ளன. ஆனால், அங்கே ஒரு புதிய அரசியல் குறித்து இன்னும் அதிகம் விவாதிக்கப்படவில்லை.

அதே சமயம், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கொரோனாவிற்கு பிறகான உலகம் பற்றிய விவாதம் வலுவடைந்துள்ளது. பொது வாழ்க்கை முடக்கப்பட்டாலும், பொது விவாதம் வேகப்பட்டுள்ளது. சரிவடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தக பரிமாற்றங்கள், மையப்படுத்தப்பட்ட அல்லது பிராந்தியமயமாக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் ஒப்பீட்டு நற்பண்புகள், வெளிப்படும் உலகமயமாக்கலின் பலவீனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம், ஜனரஞ்சகம், சர்வாதிகாரத்தின் உள்ளார்ந்த நன்மை ஆகியவை அனைத்தும் விவாதத்திற்குரியவை ஆகியுள்ளன. தற்போதைய தொற்றுநோய் உலகளாவிய தலைமைக்கான போட்டியாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியை மிகவும் திறம்பட கையாளும் நாடே இந்த போட்டியில் அதிக பலனடையும். காலியாக உள்ள தூதரகங்களில் இருந்து செயல்படும் அரசு தூதர்கள் அவர்களின் அரசாங்கங்களின் நெருக்கடியைக் கையாள்வதில் மும்முரமாக உள்ளனர். மேலும் பெரும்பாலும் விமர்சனங்களுக்கும், குற்றசாட்டுகளுக்கும் பதிலளிக்கின்றனர். ஒவ்வொரு நாட்டின் பெருமையும், ஆரோக்கியமும் ஆபத்தில் உள்ளன. ஒவ்வொரு நாடும் தங்கள் அண்டை நாடு கொரோனா வளர்ச்சியைக் காட்டும் வரைப்படத்தில், வளர்ச்சியை எவ்வளவு விரைவாக தட்டையக்குகின்றன என்பதைக் கவனித்து வருகின்றன.

இந்த நெருக்கடி சர்வதேச அரசியலை எவ்வாறு நிரந்தரமாக மாற்றும் என்பதை மதிப்பிடும்  குழுவினர் இவ்வாறு குறிப்பிடுகின்றனர், “ உலக நாடுகள் தற்போது இரண்டு விதமான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். ஒன்று கொரோனாவை எதிர்கொள்ள ஒன்றிணைத்தல், மற்றொன்று தங்களுடைய பாதுகாப்பிற்கு தனித்து நிற்றல் என்பதாகும். “இந்த நெருக்கடி தீவிர சமூக துயரங்களை சிறப்பாக நிர்வகிக்க தாராளவாத மற்றும் மாநிலங்களின் போட்டியிடும் கூற்றுக்களின் ஒரு முழுமையான சோதனையையும் குறிக்கிறது. தொற்றுநோய் வெளிவருகையில், இது WHO மற்றும் ஐ.நா போன்ற அமைப்புகளின் செயல்பாட்டு திறன்களை மட்டுமல்லாமல், மதிப்புகள் மற்றும் அரசியல் பேரம் பற்றிய அடிப்படை அனுமானங்களையும் சோதிக்கும். ”

கொரோனாவிற்கு எதிரான இந்த போரில் கிழக்கு நாடுகள் வென்றுள்ளதாக பலரும் ஏற்கனவே கூறி வருகின்றனர். தென் கொரிய தத்துவஞானி பைங்-சுல் ஹான், எல் பாஸில் ஒரு பிரபலமான கட்டுரையில், “ஜப்பான், கொரியா, சீனா, ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள், அவர்களின் கலாச்சார பாரம்பரியத்திலிருந்து வரும் சர்வாதிகார மனநிலையைக் கொண்டவர்கள். இங்கு மக்கள் ஐரோப்பியர்களை விட குறைவான கிளர்ச்சி மற்றும் கீழ்ப்படிதல் மனநிலையைக் கொண்டவர்கள். அவர்கள் அரசை அதிகம் நம்புகிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, வைரஸை எதிர்கொள்ள ஆசியர்கள் டிஜிட்டல் முறை கண்காணிப்பில் உறுதியாக உள்ளனர். ஆசியாவில் தொற்றுநோய்க்கு எதிராக, வைராலஜிஸ்டுகள் மற்றும் தொற்றுநோயியல் வல்லுநர்களால் மட்டுமல்ல, கணினி விஞ்ஞானிகள் மற்றும் பெரிய தரவு நிபுணர்களும் போராடுகின்றனர்” என்றார்.

அவர் மேலும் கணித்துள்ளதாவது, “தொற்றுநோய்க்கு எதிரான வெற்றியின் மாடலாக, சீனா இப்போது தனது டிஜிட்டல் போலிஸ் அமைப்பை விற்க முடியும். சீனா தனது அமைப்பின் மேன்மையை இன்னும் பெருமையுடன் காண்பிக்கும்.” பாதுகாப்பு மற்றும் சமூக சிந்தனைகளில் ஈர்க்கப்பட்ட மேற்கத்திய வாக்காளர்கள் அவர்களின் சுதந்திரங்களை தியாகம் செய்ய தயாராக இருக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார். உங்கள் சொந்த பிளாட்டில் வசந்த காலத்தை கழிக்க வேண்டிய கட்டாயத்தில் கொஞ்சம் சுதந்திரம் உள்ளது. உண்மையில், சீனா ஏற்கனவே வெற்றியின் படிக்கட்டில் உள்ளது. அது கொரோனா பரவல் நிகழ்வில், முதலில் குற்றவாளியாக இருந்து தற்போது உலகத்தின் மீட்பராகியுள்ளது.  இளம் தலைமுறையினருக்கு மத்தியில் சீன தனது மேன்மைமிக்கவராக சமூக ஊடகங்கள் வழியாக காட்டிக் கொண்டுள்ளது. இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாண்டெய்னில் உள்ள முன்னாள் பிரெஞ்சு தூதர் மைக்கேல் டுக்லோஸ், சீனா தனது அரசியல் அமைப்பை மேம்படுத்துவதற்காக நாட்டின் ‘வைரஸுக்கு எதிரான வெற்றியை’ பயன்படுத்த வெட்கமின்றி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சில காலமாக அறிவிக்கப்படாத பனிப்போர் அதன் உண்மையான முகத்தை கோவிட் -19 பரவல் வழியாக, மோசமாக வெளிப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் சர்வதேச உறவுகள் கோட்பாட்டாளர் ஸ்டீபன் வால்ட் சீனா இந்தப் போரில் வெற்றி பெறக்கூடும் என்று கருதுகிறார். “கொரோனா வைரஸ் அதிகாரத்தையும் செல்வாக்கையும் மேற்கிலிருந்து கிழக்கே மாற்றுவதை துரிதப்படுத்தும். தென் கொரியாவும் சிங்கப்பூரும் இந்தப் போரில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. சீனாவும், ஆரம்பத்தில் தடுமாறினாலும் இந்த நெருக்கடியை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளது. ஆனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அரசாங்கங்களின் செயல்பாடு பலத்த சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. மேலும் மேற்கத்திய நாடுகள் என்ற சக்தியின் பலவீனமான பக்கம் மோசமாக வெளிப்பட்டுவிட்டது. ஸ்லோவேனிய தத்துவஞானி ஸ்லாவோஜ் ஷீக் போன்ற இடது ஐரோப்பிய நாடுகள் ஒரு சர்வாதிகாரமிக்க தொற்றுநோய்க்கு அஞ்சுபவர்களாக உள்ளனர். பலரும், மேற்கு நாடுகளோ, ஒரு மனித முகத்துடன் ஒரு புதிய காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளன. நிபுணர்களால் சட்டபூர்வமானவை என்று கூறப்பட்டாலும், இவர்களின் நடவடிக்கைகள் வருத்தத்தோடும் அனுதாபத்தோடும் செயல்படுத்தப்படும் இரக்கமற்ற உயிர்வாழும் நடவடிக்கைகளாக அமைந்துள்ளன” என்று கணித்துள்ளனர்.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் அசோகா பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியரான சிவசங்கர் மேனன் கூறுகிறார்: “தொற்றுநோயைக் கையாள்வதில் சர்வாதிகாரிகளும், ஜனநாயகவாதிகளும் சிறந்தவர்கள் அல்ல என்பதை இதுவரையிலான அனுபவம் காட்டுகிறது. உண்மையில், கொரியா, தைவான் போன்ற ஆரம்ப மற்றும் வெற்றிகரமாக நிர்வகித்த நாடுகள் ஜனநாயக நாடுகளாக இருந்தன – ஜனநாயக அல்லது சர்வாதிகார தலைவர்களால் வழி நடத்தப்பட்டவை அல்ல”. பிரான்சிஸ் ஃபுகுயாமா,  “நெருக்கடிக்கு எதிரான பயனுள்ள நடவடிக்கையில், ஒரு மெல்லியக் கோடு ஒருபுறம் எதேச்சதிகாரங்களையும் மறுபுறம் ஜனநாயகங்களையும் வைக்காது. செயல்திறனின் முக்கியத்துவத்தை ஆட்சியின் வகை தீர்மானிக்காது. அதற்கு பதிலாக, அரசின் திறன் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை இவையே தீர்மானிக்கும்” என்றார். இவர் ஜெர்மனியையும், தென் கொரியாவையும் பாராட்டினார்.

தென் கொரியா உண்மையில் தன்னை ஜனநாயக சக்தியாக நிலைநிறுத்திக் கொள்கிறது.  சீனாவுக்கு மாறாக, நெருக்கடியை சிறப்பாக கையாண்டது. தென்கொரியாவின் வெகுஜன பரிசோதனைகளின் மாடலையே ஜெர்மனி பின்பற்றுகிறது என்பது குறித்த கட்டுரைகள் அதன் தேசிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறுகையில், “இந்த நெருக்கடி மேற்குலக நாடுகளை பாதிக்குமானால், அது ஏற்றுமதி பொருளாதாரத்தை நம்பியுள்ள தென் கொரியாவையும் பாதிக்கும்” என்றார். உலக அளவிலான விநியோக சங்கிலியில் தென் கொரியாவும் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். “தற்போதைய தொற்றுநோய் மருத்துவப் பொருட்களின் உற்பத்தியைக் ஒரே இடத்தில் குவிப்பதன் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது” என்று அவர் வாதிடுகிறார். இதன் விளைவாக, இறக்குமதிகள் குறைந்து, உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். அவ்வாறு நிகழுமானால், தென் கொரியாவும் பெருமை பெறும். ஆனால், அதன் சந்தைகளை இழக்க வேண்டி வரலாம். எனவே, தற்போது தென் கொரியாவும் தோல்வியுற்ற நாடே” என்றார்.

ஐரோப்பா தற்போது ஐரோப்பியர்களாலேயே மிகவும் மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. ஜாக் டெலோர்ஸ் இன்ஸ்டிடியூட்டின் துணைத் தலைவரான நிக்கோல் க்னெசோட்டோ “ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளிப்பட்ட பற்றாக்குறை, அதன் சக்தியற்ற தன்மை, அதன் பயம், திறமையின்மை என ஒவ்வொன்றும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிச்சயமாக, மக்களின் ஆரோக்கியம் அதன் திறனின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் அதை எட்ட தேவையான வழிமுறையோ பொறுப்போ இல்லாமல் இல்லை” என்றார். நெருக்கடி தோன்றியதுமே, முதலில் தோன்றிய உள்ளுணர்வு எல்லைகளை மூடுவது, உபகரணத்தை பதுக்குதல், மற்றும் தேசிய அளவிலான நடவடிக்கைகளை ஒன்றிணைப்பது ஆகியவை ஆகும். பற்றாக்குறை காலங்களில், ஒவ்வொரு நபரும்அதை தனக்கானதாக உணர்ந்தனர். இத்தாலி தன்னிச்சையாக விடப்பட்டதாக உணர்ந்தது. ஆனால் ஐரோப்பிய பிணை எடுப்பு நிதியத்தால் வழங்கப்படும் எந்தவொரு கடனுக்கும் நிர்ணயிக்கப்படக்கூடிய நிபந்தனைகள் தொடர்பாக வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவிற்கு இடையில் ஒரு விரும்பத்தகாத போராக உருவானது. ஏற்கனவே ஐரோப்பிய யூனியனால் நிராகரிக்கப்பட்ட யூரோபாண்டுகள் திட்டத்தினை இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி இத்தாலி வேறு ஒரு பெயரில் கொண்டுவர முயற்சிக்கிறது என சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம் தோல்வியுற்றால், அது வீழ்ச்சியடையவும் என்று அனைவரும் எச்சரிக்கின்றனர்.

போர்த்துகீசிய பிரதம மந்திரி அன்டோனியோ கோஸ்டா, டச்சு மந்திரி வோப்கே ஹூக்ஸ்ட்ராவின் “அருவருப்பான குட்டி” கருத்துக்களைப் பற்றி பேசினார். ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி அரஞ்சா கோன்சலஸ் இதைப் பற்றி பேசும்போது, “மொத்த கப்பலும் மூழ்கும்போது, உங்களின் முதல் வகுப்பு அறை உங்களை பாதுகாக்காது” என்பதை, டச்சுக்காரர்கள் புரிந்து கொண்டார்களா என்று ஆச்சரியப்பட்டார். முன்னாள் இத்தாலிய பிரதம மந்திரி என்ரிகோ லெட்டா, இத்தாலிக்கு உதவ டச்சு காட்டிய எதிர்ப்பைப் பற்றி கடுமையாகப் பேசியுள்ளார். அதேபோல, நெதர்லாந்தின் இத்தாலியின் மீதான பார்வை கடுமையாக மாறியுள்ளதையும் சுட்டிக் காட்டினார். “ஜேர்மன் சுங்க அதிகாரிகள் பெரும் எண்ணிகையிலான முகக்கவசங்களையும், நிவாரணப் பொருட்களையும் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் அது உதவவில்லை. அதே சமயம், ரஷ்ய லாரிகள் ஏற்றிக் கொண்டு ரோம் வீதிகளில் ஓடியதையும், மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதையும் வரவேற்றார். ஆனால், இந்த நடவடிக்கையை மேட்டியோ சால்வினி ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்து எதிர்பார்த்திருந்தார். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எங்களால் எவ்விதப் பயனும் இல்லை என்று எண்ணுகிறார்களோ என்று சந்தேகப்படுவதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையை ஈடுசெய்ய முடியாது. சால்வினியின் முடக்குதல் நிகழ்ச்சி நிரல் அதன் முடிவைக் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் கோண்டேவின் புகழ் பிரதமர் பதவியை எளிதான இலக்காக மாற்றவில்லை. இத்தாலிய குடியரசின் வரலாற்றில் கோண்டே மிகவும் பிரபலமான ஒரு தலைவராக மாறிவிட்டார். மரியன் வென்ட் போன்ற தனிப்பட்ட ஜேர்மன் அரசியல்வாதிகளும் இத்தாலியர்களின் ஒரு குழுவை சிகிச்சைக்காக பெர்காமோவிலிருந்து கொலோனுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தத்தின் மூலம் சில சேதங்களை தவிர்த்துள்ளனர். ஆனால் ஐரோப்பா முழுவதும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நெருக்கடி ஆபிரிக்காவிற்குள்ளும் ஊடுருவத் தொடங்கியுள்ளதாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மீட்புக்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது பற்றிய ஒருங்கிணைக்கப்படாத மற்றும் மிகவும் தொழில்நுட்ப ரீதியிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறது.

அட்லாண்டிக் முழுவதும் பார்த்து, டொனால்ட் டிரம்பின் குழப்பமான மாலை நேர பத்திரிக்கையலார் சந்திப்புகளை பார்த்து, பகுத்தறிவற்ற தலைவர்களைத் தவிர, பகுத்தறிவுள்ள மக்கள் எதையும் எதிர்கொண்டு திட்டமிட முடியும் என்று ஆறுதல் அடைந்துள்ளதாக ஐரோப்பிய தலைமை அறிக்கையிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் தலைவரான ஜோசப் போரலின் ஆலோசகரான நத்தலி டோக்கி, “1956 சூயஸ் நெருக்கடியைப் போலவே, இங்கிலாந்தின் உலகளாவிய சக்தி இறுதி முடிவை நெருங்குகிறதா?” ஆச்சரியப்படுகிறார். கொரோனா வைரஸ் நெருக்கடி அமெரிக்காவின் சூயஸ் தருனமாகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறார். புராஜெக்ட் சிண்டிகேட்டில் எழுதுகையில், அவர் கூறுகிறார்: “தேசிய முடிவுகளை திசை திருப்பிய முதல் கட்டத்திற்குப் பிறகு, நாங்கள் இப்போது ஒன்றிணைந்த ஒரு கட்டத்தில் நுழைந்துள்ளோம். அதில் ஐரோப்பிய ஒன்றியம் மைய நிலைக்கு வருகிறது. உலகம் ஆரம்பத்தில் ஒரு ஒருங்கிணைக்கப்படாத முறையில் நெருக்கடியை சந்தித்தது. பல நாடுகள் எச்சரிக்கையை புறக்கணித்து தனியாகச் சென்றன. அதிலிருந்து அனைவரும் பாடம் கற்றுள்ளோம். அனைவருக்குமான ஒரு வழி தெளிவாகியுள்ளது. என்றுள்ளார். ஆம். நாம் வெல்ல இன்னும் ஒரு உலகம் உள்ளது என்பது தெளிவாகியுள்ளது!

தமிழில்: லயா