குளிர்கால ஒலிம்பிக் இன்று தொடக்கம்: இந்தியா உள்பட 91 நாடுகள் பங்கேற்பு

 

சியோல்:

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி  தென்கொரியாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெறுகின்றனர்.

 

2018ம் ஆண்டின், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று முதல் ( 9-ந் தேதி)  25-ந் தேதி வரை 17 நாட்கள்  நடைபெறுகிறது.

தென்கொரியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த  குளிர்கால ஒலிம்பிக் போட்டி போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 91 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில்  லூகெர் சிவ கேஷவன், ஜெகதீஸ் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.