நாடாளுமன்றம் : ஜூலை 18 முதல் மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்

டில்லி

ந்த வருட நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜுலை 18 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடத்துவது பற்றி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.   அதில் மத்திய அமைச்சர்கள், புயூஷ் கோயல் மற்றும் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.   ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில்  அறிவிப்பு ஒன்று வெளியிடப்ப்ட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இந்த வருட நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் வரும் ஜூலை 18 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தக் கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.  வழக்கமாக இத்தொடர் ஜூலை இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும்.   ஆனால் இந்த வருடம் மத்திய அரசு இக்கூட்டத் தொடரை முன்னதாகவே நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் பல பிரச்னைகளை எழுப உள்ளதாக தெரிய வந்துள்ளது.   அதை ஒட்டி பாராளுமன்றத்தில் சுவையான மற்றும் சூடான விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.