கல்விக்காக விப்ரோ தலைவர் அசின் பிரேம்ஜி ரூ.27,514 கோடி நிதி உதவி

பெங்களூரு

விப்ரோ குழுமத்தின் தலைவர் சென்ற வருடம் கல்விக்காக ரூ.27514 கோடி நிதி உதவி அளித்ததால் மிகப் பெரிய கொடையாளர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.

ஹுருன் ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதிக நன்கொடை வழங்கும் 10 பேரை தேர்ந்தெடுக்கிறது,   அதில் அதிக நன்கொடை அளித்தவரை ஆண்டின் மிகப் பெரிய கொடையாளர் என புகழாரம் சூட்டி வருகிறது.   அவ்வகையில் இந்த வருடத்துக்கான நன்கொடையாளர்கள் 10 பேர் குறித்த விவரங்களை ஹுருன் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் ரூ.27514 கோடி ரூபாய் நன்கொடை அளித்த விப்ரோ குழுமத்தின் தலைவர் அசிம் ப்ரேஜி வந்துள்ளார்.   கடந்த மூன்று வருடங்களாக இவர் முதல் இடத்தில் உள்ளார்.  அவர் கடந்த 3 வருடங்களாக இதே தொகையை தொடர்ந்து தனது அசிம்  ப்ரேம்ஜி அறக்கட்டளை மூலம் கல்விக்காக வழங்கி உள்ளார்.  கடந்த 2014 ஆம் வருடம் ரூ.12316 கோடி நிதி உதவி அளித்ஹ அவர் கடந்த மூன்று வருடங்களாக அதைப்போல் இருமடங்கு தொகை அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்

விப்ரோ அதிபர் அமைத்துள்ள அறக்கட்டளை மூலம் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.   இந்தியா முழுவதிலும் இருந்து 8 மாநிலங்களில் உள்ள 3.5 லட்சம் பள்ளிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர்களான நந்த மற்றும்ரோகினி நிகலேனி சென்ற வருடம் இருந்த ஆறாம் இடத்தில் இருந்து இந்த வருட்மிரண்டாஅம் இடத்துக்கு முன்னேறி உள்ளனர்.   மூன்றாவது இடத்தில் இன்ஃபோசிஸ் அதிபர் நாராயண மூரித்ஹ்டி உள்ளார்.    சென்ற வருடம் அளிக்கப்பட்டதை விட இந்த வருடம் இருமடங்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கதாகும்.