எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கு கேபிள் இல்லாமல் சாலையின் மூலமே சார்ஜிங் – துபாயில் புதுமை..!

துபாய்: எலெக்ட்ரானிக் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள், சாலையின் மூலமே ஆற்றல் ஏற்றிக்கொள்ளும்(சார்ஜிங்) வகையிலான புதிய தொழில்நுட்பச் சோதனை துபாயில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SMFIR என்று சுருக்கமாக அழைக்கப்படும் Shaped Magnetic Field in Resonance தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக எலெக்ட்ரானிக் முறையில் இயங்கும் வாகனங்கள் இந்த வசதியைப் பெற முடியும்.

இந்த முறையில், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கையிலும், இயக்கத்தில் இருக்கும்போதும் வயர்லெஸ் முறையில் ஆற்றல் ஏற்றிக்கொள்ளலாம்.

இந்தப் புதிய தொழில்நுட்பமானது, பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு தொடர்பான சிக்கல்களை களைய வழிவகுக்கிறது என்று துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தொழில்நுட்ப சோதனையின்போது, கேபிள் மூலமாக ஆற்றல் ஏற்றப்படும் முறையைவிட, இந்தப் புதிய முறையானது மிகவும் எளிதாகவும், அதிகப் பயன் வாய்ந்த ஒன்றாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி