அமெரிக்காவில் 3.21 லட்சம் பேர் தெலுங்கு பேசுகின்றனர்…சர்வே அறிக்கை

வாஷிங்டன்:

இந்திய மொழிகளில் தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவில் 3.21 லட்சத்துடன் 3வது இடத்தில் உள்ளனர்.

2012&16ம் ஆண்டு அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு ஒரு சர்வே மேற்கொண்டது. அமெரிக்க சமுதாயம் என்ற பெயரில் நடந்த இந்த சர்வேயின் அறிக்கையில், வீடுகளில் 5 வயதுக்கு மேற்பட்ட தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்து 695 என தெரியவந்துள்ளது.

இந்திய மொழிகளில் தெலுங்கு 3வது இடம் பிடித்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 699 என கணக்கிடப்பட்டுள்ளது.

தெலுங்கு பேசுவோரது எண்ணிக்கை தற்போது தான் முதன் முறையாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழி பேசுவோர் ஒன்றாக இணைத்து கணக்கிடப்படுவார்கள். இதர இந்திய மொழிகள் மற்றும் இதர ஆசிய மொழிகள் என்ற அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

7.4 லட்சம் மக்களுடன் இந்தி முதல் 10 மொழிகளில் இடம்பெற்றுள்ளது. அந்நாடு முழுவதும் தமிழ் பேசும் மக்கள் பரவலாக வசிக்கின்றனர். தெலுங்கு பேசும் மக்கள் இல்லினோயிஸ், நியூயார்க், வாஷிங்டன், ஒரேகன், கலிபோர்னியா, பென்சில்வானியா பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர்.

மேலும், தெலுங்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பலர் அங்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களாக முன்பும், இப்போதும் உள்ளனர். மைக்ரோசாப்ட் சிஇஒ சத்யா நாதல்லா, அபாட் சிஸ்டம்ஸ் சிஇஒ சாந்தனு நாராயன் ஆகிய இருவரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள்.

சீன கார் நிறுவனமான என்ஐஒ மற்றும் முன்னாள் மோட்டரோலா மற்றும் சிஸ்கோ நிறுவன சிஇஓ.வாக விஜயவாடாவை சேர்ந்த பேட்மஸ்ரி வாரியரும், கூகுல் நிறுவன சிஇஓ.வாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை ஆகியோரும் உள்ளனர என்பது குறிப்பிடத்தக்கது.