கடும் எதிர்பார்ப்புடன் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

னாஜி

ன்று மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், கோவாவில் நடை பெறுகிறது.


இந்தியாவில் பொருளாதார நெருக்கடி பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெ3ளியாகி வருகின்றன.  இதையொட்டி  பல்வேறு துறையினரும் வரி குறைப்பைக் கோரி வருகின்றன.  இதனால் இக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.  அதில் குறிப்பாக, வாகனத் துறை, ஓட்டல்கள், பிஸ்கட், தீப்பெட்டி உள்ளிட்ட துறைகளுக்கான வரிக்குறைப்பு அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தொடர்ந்து விற்பனை சரிவைச்  சந்தித்து வரும் நிலையில், வாகன துறையினர், கார்கள் மீதான, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாகக் குறைக்க, கோரி வருகின்றனர்.  இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மிகவும் சரியான நேரத்தில் நடைபெற இருப்பதாக வாகன துறையினர் தெரிவிக்கின்றனர்., விழாக் கால விற்பனை இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது.  எனவே இக்காலகட்டத்தில், விற்பனையை அதிகரிக்க, வாகன தயாரிப்பு நிறுவனங்கள்  தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க உள்ள. நிலையில், ஜி.எஸ்.டி., கூட்டத்தில் வரி குறைக்கப்பட்டால், வாகனங்கள் விலை மேலும் குறைந்து, விற்பனை அதிகரிக்கும். நிலைமை சீரடையும் என, ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில்  வாகனங்களுக்கு, இம்முறை வரி குறைப்பு இருக்காது; குறிப்பாக, கார்களுக்கு இருக்காது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், . நாட்டின்  ஜி.எஸ்.டி., வருவாயில், வாகன துறையின் பங்களிப்பு மட்டும், 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அப்படி இருக்க, வரி வருவாய் குறைவதை, தற்போதைய பொருளாதார சூழலில், அரசு விரும்பாது என சொல்லப்படுகிறது. அத்துடன், மாநில அரசுகளும் தங்களுக்கான வருவாய் பாதிக்கப்படும் என, அஞ்சுகின்றன எனவும் கூறப்படுகிறது..

அதற்கு ஏற்றார்போல்  கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், வாகன துறையினருக்கு, ஜி.எஸ்.டி.,யை குறைக்கக் கூடாது என, தெரிவித்துள்ளன. ஆயினும், குறிப்பிட்ட காலம் வரையிலான வரி குறைப்பை அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதே  வேளையில், வாகன துறையினர், குறிப்பிட்ட கால அளவில் அறிவிக்கப்படும் வரி குறைப்பு, தற்போதைய சிக்கலை ,முழுவதுமாகத் தீர்க்க உதவாது.  இதற்குக் காரணம், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ அறிமுகம் ஆகும்போது, மீண்டும் விலை அதிகரித்து விடும் எனக் கூறப்படுகிறது.   அதனால் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் வரி குறைப்பு அறிவிக்கப்படலாம். எனவும், அரசியல் அழுத்தங்களால், அரசு கார்களுக்கு வரி குறைப்பு செய்யக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

உணவகத் துறையை பொறுத்தவரை, ஆடம்பர விடுதிகளுக்கான வரியைக் குறைக்க வாய்ப்புள்ளது.  தற்போது ஓரிரவு தங்க, 7,500 ரூபாய் அறை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.  சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு இருப்பதால், 18 சதவீத வரி வகைக்கான, அறை வாடகை உச்ச வரம்பை, 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. .

அதைப் போல், வெளிப்புற உணவு வழங்குநர்களுக்கும்,  18 சதவீத வரியைக் குறைக்கலாம் எனவும், மேலும் தீப்பெட்டி தொழிலுக்கும், பிஸ்கட்டுக்கும் சலுகைகள் வழங்கப்படலாம். சிமென்ட் மற்றும் ஜவுளிக்கும் வரிக்குறைப்பு குறித்த செய்திகள் வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

சென்ற மாத ஜி.எஸ்.டி., வருமானம் ரூ.1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது.   இதனால்  புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு, வரியைக் கூட்டி, வருவாயை அதிகரிக்கவும் முடிவு செய்யப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.