ஐதராபாத்:

தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இன்று தொடங்கியது.

மாநாட்டை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்ததால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை விலக்கி கொண்டோம். மக்களை வஞ்சித்த பா.ஜ.க. அரசு, இங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்கிறது.

ஒருமித்த கட்சிகளுடன் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைக்கும். இதில் பின்வாங்க மாட்டோம். 2019-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என பா.ஜ.க.வினர் பகல் கனவு காணுகின்றனர். அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது. பொய் வாக்குறுதிகளை வாரி வழங்கி நிறைவேற்ற முடியாத பிரசார பிரதமர் மோடி அடுத்த முறை பதவியில் அமர முடியாது’’ என்றார்.