10M பார்வையாளர்களை பெற்ற ஆடை டீசர்…!

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு அதிகாரிகள் ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற பாடகி பி.சுசிலா பக்திப்பாடல் ஒன்றை பாடியுள்ளார். பாடல் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், 70 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு படத்தில் பி.சுசிலா பாடிய பக்தி பாடலை தற்போது ஆடை படத்திற்காக பாடியுள்ளார். விரைவில் இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆடை படம் டீசர் 10M பார்வையாளர்களையும் ட்ரெய்லருக்கு 4M பார்வையாளர்களையும் பெற்றிருப்பதாக இயக்குநர் ரத்னகுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Adai, Amala Paul, rathnakumar, teaser, trailer
-=-