ஐடி சட்ட திருத்தம் மூலம் இணையத்தை கண்காணிக்க உள்ள மத்திய அரசு

டில்லி

ணையத்தில் வெளியாகும் அனைத்து தகவல்களையும் கண்காணிக்க மத்திய அரசுக்கு உதவும் வகையில் ஐடி சட்டம் திருத்தம் செய்யப்பட உள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டமான ஐடி சட்டம்  திருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஐந்து பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.    அந்த திருத்தம் குறித்த அதிகாரிகள் கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது.

இந்த ரகசியக் கூட்டம்  சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளது.   இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சரக அதிகாரிகளுடன் சைபர் சட்ட அதிகாரிகள்,  மற்றும் சமூக தளங்களான கூகுள், முகநூல், வாட்ஸ்அப்,  அமேசான், யாகு, டிவிட்டர், ஷேர்சாட், ஆகியவற்றி பிரதிநிதிகளும்,  இணையம் வழங்கும் நிறுவனங்கள் சங்கமும் கலந்துக் கொண்டுள்ளன.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதைக் கொண்டு இந்த திருத்த அறிக்கை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.    இந்த சட்டத்தின் மூலம் இணைய தள உபயோகிப்பாளர்கள் கடந்த 72 மணி நேரத்தில் பதிவிட்டவை அனைத்தும் அரசால் ஆராய முடியும்.    அதாவது சட்ட விரோத பதிவுகள் பதியப்பட்டு அழிக்கப்பட்டாலும் அதை அரசால் கண்டுபிடிக்க முடியும்.

இந்த குளிர்காலத் தொடரில் இந்த சட்ட திருத்த மசோதா அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.     இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் இந்த  சட்டதிருத்தத்தினால் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம்  பறிக்கப்படும் நிலை உண்டாகி இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.