10 ஆண்டுகள் கழித்து யமுனை நதியில் தென்பட்ட அரியவகை உயிரினம்…!

டெல்லி: 10 ஆண்டுகளுக்கு பிறகு, யமுனை நதிக்கு வந்த அரியவகை முதலை உயிரினம் வரத் தொடங்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலைகள் இயக்கம், வாகன போக்குவரத்து இல்லாததால் காற்றின் மாசு குறைந்து காணப்பட்டது.

நதிகளில் நீரும் சுத்தமாகியுள்ளது. இந்தியாவின் மிக பெரிய நீர் வழிப்பாதையாக கருதப்படும் யமுனை நதி, மாசடைந்து காணப்பட்டது. நதியில் டால்பின்கள் மற்றும் மீன்களை மட்டுமே உண்டு வாழும் கரியல் (Gharial) என்ற அரியவகை முதலைகள் வசித்து வந்தன.

அதிகமான நீர் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல மடிந்து போயின. ஆகையால் கரியல் வகை முதலைகள் 10 ஆண்டுகளாக யமுனை நதியில் தென்படவே இல்லை.

இந் நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், யமுனை நதி சுத்தமாக காட்சி அளிக்கிறது. அதனால் கரியல் வகை முதலைகள் மீண்டும் யமுனை நதியில் தென்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து, வனத்துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அதை புகைப்படம் எடுத்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி