அமிர்தசரஸ்:

ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில், பஞ்சாப் மாநிலம் முழுவதுமிருந்து 13 ஆயிரம் கிராமங்களிலிருந்து மண் எடுத்து நினைவகம் கட்டப்படுகிறது.

ஜாலியன் வாலாபாக்கில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சீக்கிய புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருநாள் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

அப்போது, அரசுக்கு எதிராக அவர்கள் போராடுவதாகக் கருதி, அந்த அப்பாவி மக்கள் மீது கர்னல் ரெஜினால்டு டயர் ஆயிரத்துக்கும் அதிகமான முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பிரிட்டிஷாருக்கு எதிராக கோபத்தை உருவாக்கியது.

இந்த படுகொலை நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து, அமிர்தரசரஸில் நினைவிடம் கட்டும் பணியை பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் முடுக்கிவிட்டுள்ளார்.

ஜாலியன் வாலாபாக்கில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சீக்கிய புத்தாண்டு மற்றும் அறுவடைத்திருநாள் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

அப்போது, அரசுக்கு எதிராக அவர்கள் போராடுவதாகக் கருதி, அந்த அப்பாவி மக்கள் மீது கர்னல் ரெஜினால்டு டயர் ஆயிரத்துக்கும் அதிகமான முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பிரிட்டிஷாருக்கு எதிராக கோபத்தை உருவாக்கியது.
இந்த படுகொலை நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து, அமிர்தரசரஸில் நினைவிடம் கட்டும் பணியை பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் முடுக்கிவிட்டுள்ளார்.

இந்த பணிக்காக முதல்வர் அலுவலகம் மற்றும் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து துறையும் இணைந்து செயல்படுமாறு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமிர்தசரஸில் நினைவகம் கட்டும் இடத்தை அடையாளம் காணுமாறும் அமிர்தசரஸ் துணை ஆணையரை முதல்வர் அம்ரீந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நினைவகத்தை ஏப்ரல் 13-ம் தேதி திறக்கும் வகையில் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்படுமாறு கலாச்சார விவகாரத்துறை முதன்மை செயலரை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.