வுதாம்ப்டன்

நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை இந்திய அணி வென்றது.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று இந்திய அணியை தென் ஆப்ரிக்க அணி எதிர் கொண்டது   டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  தென் ஆப்ரிக்க அணியின் வீரர்களான டு பிளெச்சிஸ் மற்றும் ராசி ஆகியோர் 80 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தானர்.   அதைப் போல் கிறிஸ் மாரிஸ் மற்றும் ரபாடா ஆகியோரும் திறம்பட ஆடினர்,.

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.   அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.  தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் ஷர்மா  இந்த ஆட்டத்தில் 144 பந்துகளில் 122 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

விராட் கோலி 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.  இந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் அருமையான ஃபீல்டிங்கால் இந்தியாவால் ஒற்றை ரன்களே அதிகம் எடுக்க முடிந்தது.  ஆயினும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி சென்சுரி அடித்தார்.  இது ஒரு நாள் போட்டிகளில் அவருடைய 23 ஆம் சென்சுரி ஆகும்.

இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.   இந்தியாவின் இந்த வெற்றிக்கு ரோகித் சர்மா அடித்த ரன்களே மிகவும் முக்கியமானதாக அமைந்தது.  இந்த போட்டியின் மூலம் உலகக் கோப்பை 2019ல் இந்தியா தனது வெற்றியை தொடங்கி உள்ளது.

ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார்