சென்னை:

திரையரங்குகளுக்கு தமிழக அரசு விதத்துள்ள 8% சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் என்றும், திரைப்படங் கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில் வெளியிட வேண்டும்  திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்  இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை தழுவினால், அவர்களே பொறுப்பேற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.

திரையரங்குகள் மீது மாநில அரசு விதிக்கும் 8% சதவீத வரியை வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும்.‘

வரியை விலக்க மாநில அரசு   தவறினால் மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.

திரைப்பட தயாரிப்பாளர்கள், படம் வெளியான 100 நாட்களுக்குப் பிறகே, அமேசான் பிரைம், நெட் ப்ளீக்ஸ் போன்ற வெப் ஸ்ட்ரீமிங் தளங்களில் படத்தை வெளியிட வேண்டும்

நூறு நாட்களுக்குள் வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகள் இனி திரையிட மாட்டோம்.

இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து பேசிய திருப்பூர் சுப்பிரமணியன், தீபாவளி திரைப்படங்கள் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்றவற்றில் விரைவாக வெளியான பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் வருவது முற்றாகக் குறைந்துபோய், தொழில் நடத்துவதே கேள்விக்குறியாகி விட்டது என்று கூறினார்.